Monday, April 19, 2010

குஷ்புவும் தொல்காப்பியமும்

குஷ்பு என்னதான் பேசினார் என்பது எனக்கு சரியாகத் தெரியாது. அவர் "மணமாவதற்கு முன்பு ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்வதில் தப்பில்லை - கன்னித்தன்மை புனிதம் என்பதினால் காப்பற்றப்படவேண்டும் என்பதில்லை" என்று பேசினதாகத்தான் சொன்னேன்.
தமிழ்ப்பெண்களைப் பற்றித் தரக்குறைவாகச் சொல்லவில்லை. திரித்துப் பேசுகிறார்கள். என்மேல் வழக்குப் போட்டிருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தாராம். அந்த விளக்கத்தை நானும் படித்ததில்லை. இன்று 24.03.2010 செய்தித்தாளில் படித்தேன். உச்ச நீதி மன்றம், "குஷ்பு மேல் போடப்பட்டிருக்கும் 22 வழக்குகளை விசாரிப்பது வீண். நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கே நேரம் போதவில்லை " என்று தன் எரிச்சலையும் கோபத்தையும் வெளியிட்டிருக்கிறது. கலைஞரும் களவொழுக்கம் ஒன்று இருக்கிறதுஎன்றும் எழுதியுதியோ பேசியோ இருக்கிறாராம். குஷ்புவுக்கு தமிழ் தெரியாததால் கலைஞரின் கூற்றை தக்கவர்களிடம் இருந்து விளக்கம் கேட்டுக்கொண்டு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வழக்குப் போட்ட ஒழுக்கக் காவலர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டவர்கள் யாரென்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் எத்தனையோ ஒழுக்கக் கேடுகள், சட்ட மீறல்கள், அக்கிரமங்கள் நடக்கின்றன. அவையெல்லாம் இவர்கள் கண்பார்வைக்குப் படவில்லை. வழக்குப் போட்டவர்கள் குஷ்பு மீது என்ன குற்றம் சொல்கிறார்கள் "குஷ்புவின் பேச்சினால் தமிழ் சமூத்தில் கலவரங்கள் வெடிக்கும்" தமிழ் நாட்டில் கலவரங்களையும் வன்முறைகளையும் எழுப்பும் தாதாக்கள் சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக்கொள்ளாமல் கௌரவமிக்க கனவான்களாகவும் அரசியல்வாதிகளாகவும் உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் களவொழுக்கம் இருந்தது. தொல்காப்பியத்தின் மூன்றாவதாக இருக்கும் பொருளதிகாரத்தில் களவியல் என்று ஒன்று உண்டு. அதன் 1048 இல் இருந்து 1076 செய்யுள்கள் களவொழுக்கம் பற்றிப் பேசுகின்றன.

1048 செய்யுளின் முதல் ஆறு வரிகள் பின்வருமாறு.....

மெய்தொட்டுப் பாயிரல், பொய் பாராட்டல்,
இடம்பெற்றுத் தாழா அல், இடையூறு கிளர்த்தல்
நீடு நினைந்து இரங்கல், கூடுதல் உறுதல்
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தோற்றம் உளப்படத் தொகைஇப்
பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்

இதன் பொருள்
1.தலைவியின் உடலைத் தொட்டுப் பழகி கூச்சத்தை போக்குதல்.
2.அவள் நெற்றி, கூந்தலைப் போல்வனவற்றை புனைந்து பாராட்டல்
3.அவளை நெருங்கித் தழுவுதல்
4.அவள் நாணமுற்று விலகுவதால் தான் துன்புறுவதைச் சொல்லுதல்
5.இவள் இணங்காதவள் போலக் காணப்படுதலால், எப்போது இசைவாளோ என்று நினைந்து இரங்குதல்
6.கூடி மகிழ்தல்
7.தான் கூடிய 'நுகர்ச்சியை' விரைந்து பெற்றவிடத்து அவ்வின்பத்தில் திளைத்தல்
8.அப்போது அவளது தீராத அச்சத்தைத் தீர்த்து உறுதி கூறித் தேற்றுதல்
இவை எட்டும் இயற்கைப் புணர்ச்சியாம் முதற் கூட்டத்தில் நிகழ்வன -

( நன்றி - உரை விளக்கம் - தமிழண்ணல் )

குஷ்புவிற்குத் தெரிந்த தமிழ்ப்பண்பாட்டை தெரியாமல் அவரைக் கண்டனம் செய்வோரை விடுவாரா தொல்காப்பியப் புகழ் கலைஞர்?

1 comments:

Unknown said...

actually they need to disrobe women in movies. poor metaphysics of pleasure good enough for masturbation is enough for these people conditioned thoroughly by victorian moral strictures...ravi sent me the link...good that u hav started blogging...warm regards...